Thursday 14 May 2015

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் டெக்னீஷியன் பணிகள்

இந்திய கப்பற்படையின் மும்பை கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 299 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 299
பணி: Tradesman (Skilled)
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 மற்றும் இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் தேசிய அப்ரண்டிஸ் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்களின் பரிசீலனைக்கு பின் தேர்வு செய்யப்படுபவர்கள் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு ஆகியவை மும்பையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.godiwadabhartee.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.5.2015
மேலும் துறைவாரியான காலியிடங்கள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Friday 8 May 2015

மும்பை கப்பல் தளத்தில் 299 பணியிடங்கள்

மத்திய அரசின் கீழ் மும்பையில் செயல்பட்டு வரும் நேவல் டக்யார்டு கப்பல்தளத்தில் 299 டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 299
பணி: டிரேட்ஸ்மேன் (எலக்ட்ரிக்கல், பிட்டர், இன்ஜின் பிட்டர், வெல்டர், ஷிப்ரைட், பெயிண்டர், மில்ரைட், ரிகர், பேட்டன் மேக்கர், பாய்லர் மேக்கர்)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஏதாவதொன்றில் தொழில்நுட்ப பிரிவில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,  பணித்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 11.05.2015
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.